×

உத்தரபிரதேசத்தில் 3ம் கட்ட தேர்தல் பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது: அகிலேஷ் யாதவ் உறுதி

சம்பல்: உத்தரபிரதேசத்தில் நடக்கும் 3ம் கட்ட தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது என்று அகிலேஷ் யாதவ் உறுதியுடன் கூறினார். சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், சம்பல் தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில், ‘உத்தரபிரதேசத்தில் வரும் மே 7ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது. மூன்றாம் கட்ட தேர்தல் சமாஜ்வாதி கட்சிக்கு சாதகமாக உள்ளது. காற்றின் திசை எந்தப் பக்கம் செல்கிறது என்பது பாஜகவுக்கு தெரியவில்லை. அதனால் அவர்கள் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று கூறிக்கொண்டே இருந்தனர். இரண்டு கட்ட தேர்தல் முடிந்த பிறகு, அவர்கள் தற்போது 400 இடங்களுக்கு மேல் வெற்றி என்ற முழக்கத்தை கைவிட்டனர்.

இதற்கு காரணம், பாஜகவை மக்கள் ஏற்கவில்லை. இந்த தேர்தலானது இந்திய அரசியலமைப்பை மாற்ற விரும்புபவர்களுக்கும், அரசியலமைப்பை பாதுகாக்க விரும்பும் சோசலிஸ்டுகளுக்கும் இடையிலான போராட்டமாகும். அரசியல் சாசனத்தை மாற்றி மக்களின் வாக்குரிமையை பறிக்க பாஜக சதி செய்கிறது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற விரும்புபவர்கள், பொதுமக்களால் மாற்றப்படுவார்கள்’ என்று பேசினார்.

The post உத்தரபிரதேசத்தில் 3ம் கட்ட தேர்தல் பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது: அகிலேஷ் யாதவ் உறுதி appeared first on Dinakaran.

Tags : BJP ,Uttar Pradesh ,3rd phase elections ,Akhilesh Yadav ,Sambal ,phase ,Uttar ,Pradesh ,Samajwadi Party ,Chief Minister ,
× RELATED உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலை...