×

கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் சமத்துவ பொங்கல்

 

ஜெயங்கொண்டம்,ஜன.13: ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு ஹெலன் ஹெல்லர் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற, சமத்துவ பொங்கல் விழாவினை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்து மாணவ,மாணவிகளுக்கு சீருடை வழங்கினார்.

இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் டென்சா, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் பாக்கியராஜ், வட்ட தலைவர் மணிமாறன், வட்ட செயலாளர் ஆனந்த், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தினேஷ், ரஞ்சித்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

The post கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் சமத்துவ பொங்கல் appeared first on Dinakaran.

Tags : Samatthu ,Pongal ,Hearing ,Impaired School ,Village Administrative Officers Munnetra ,Sangam ,Jayangondam ,K.S.K.Kannan ,Samatthu Pongal festival ,Tamilnadu Village Administrative Officers Progress Association ,Helen Heller Hearing Impaired School ,Jayangondam Cross Road ,Samatthu Pongal ,Hearing Impaired School ,Village Administrative Officers Munnetra Sangam ,Dinakaran ,
× RELATED மேலூர் அருகே சமத்துவ மீன்பிடி திருவிழா: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு