- டாஸ்மாக்
- திருவள்ளுவர் தினம்
- குடியரசு தினம்
- திருப்பூர்
- மாவட்டம்
- கலெக்டர்
- கிறிஸ்தராஜ்
- வடலூர் இராமலிங்கர் நினைவு நாள்
- தின மலர்
திருப்பூர், ஜன.12: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 16ந் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் வருகிற 25ந் தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் மற்றும் 26ந் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக்கடைகள் அவற்றுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை நாள் முழுவதும் மூடப்பட்டு,மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, திருப்பூர் மாவட்டத்தில், மேற்படி நாட்களில் அனைத்து மதுபான கடைகள், மதுபானகூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியன செயல்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post திருவள்ளுவர் தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு appeared first on Dinakaran.