×

முப்பருப்பு பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி 1 கப்,
கடலைபருப்பு,
பாசிபருப்பு,
துவரம் பருப்பு தலா ½ கப்,
தேங்காய் துருவல் ½ கப்,
காய்ந்த மிளகாய்,
பச்சை மிளகாய் தலா 2,
கடுகு,
சீரகம் தலா ½ டீஸ்பூன்,
எண்ணெய் 5 ஸ்பூன்,
உப்பு தேவைக்கு,
கறிவேப்பிலை சிறிது.

செய்முறை:

குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி அரை லிட்டர் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதித்ததும் அரிசி, பருப்புகளை களைந்து போட்டு குக்கரை மூடி வேகவைக்கவும். மூன்று விசில் வந்ததும் இறக்கவும். முப்பருப்பு
பொங்கல் சுவையாக இருக்கும்.

The post முப்பருப்பு பொங்கல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சாமை மிளகு பொங்கல்