×

சாத்தனூர் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய்களின் பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், 2024-ஆம் ஆண்டிற்கு சாத்தனூர் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய்களின் பாசன நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு முறையே 330 கனஅடி / வினாடி மற்றும் 200 கனஅடி வினாடி, மொத்தம் 530 கனஅடி வினாடி வீதம் 11.01.2024 முதல் 20.04.2024 வரை 100 நாட்களுக்கு தொடர்ச்சியாக 4579.20 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட்டும், திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு நிலங்களுக்கு உரிமை நீர் 1200 மில்லியன் கனஅடி நீரினை நீர் பங்கீடு விதிகளின்படி ஏப்ரல் 30-க்குள் விவசாயிகளின் கோரிக்கைப்படி தேவைப்படும்பொழுது மூன்று தவணைகளில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 50000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post சாத்தனூர் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய்களின் பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை appeared first on Dinakaran.

Tags : Chatanur ,Thiruvannamalai ,Thiruvannamalai District, ,Thandaramptu Circle ,Dinakaran ,
× RELATED சாத்தனூர் அணையில் இருந்து 13 ஆயிரம் கன...