×
Saravana Stores

குறைதீர் கூட்டத்தில் மனு பெண் தலைமை ஆசிரியைகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி

 

பெரம்பலூர், ஜன. 10: பெரம்பலூரில் பெண் தலைமை ஆசிரியைகளுக்கு நடந்த ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்கள் அனைவருக்கும் பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அண்ணாதுரை வழிகாட்ட லின் பேரில், பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தையை படிக்க வைப்போம் என்றத் திட்டத்தின் கீழ் தங்களது பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஆசிரியைகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி பெரம்பலூர் நகராட்சி எளம்பலூர் சாலையிலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

விழிப்புணர்வுப் பயிற்சியில் பள்ளி அள வில் மாணவிகள் தெரிவு செய்யப்பட்ட மாணவிகளின் 70-க்கும் அதிகமான படைப்புகளை மாவட்ட அளவில் காட்சிபடுத்தினர். இந்த நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அண்ணாதுரை, பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி) ஜெகநாதன், பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கலாராணி ஆகியோர் கூட்டாக தலைமையேற்று நடத்தினர். சிறப்பு விருந்தினர்களாக மாவட்டத் திட்ட அலுவலர் ஜெய ஸ்ரீ, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் சந்தியா, சுகாதாரத்துறை சாந்தி, மாவட்ட சமூக நலத்துறை மேகலா ஆகியோர் பங்கே ற்றனர்.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் தொடக்கக் கல்வியின் உதவி திட்ட அலுவலர்களும், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர், பெரம்பலூர் வட்டாரக் கல்வி அலுவலர்களும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பு செய்தனர். பெண் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து வழங்குதல், உயர்கல்வி வழிகாட் டல், குழந்தைத் திருமணம் தடுப்பு, சுகாதாரத்தைப் பேணிகாத்தல் போன்ற பெண்கள் நல தலைப்பில் அனைத்து ஒன்றியங்களை சேர்ந்த பெண் தலைமை ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பெண்களுக்கான அரசின் நலத்திட்டங் கள் குறித்தும் விவரிக்கப்பட்டது.

The post குறைதீர் கூட்டத்தில் மனு பெண் தலைமை ஆசிரியைகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Perambalur ,District ,Education ,Dinakaran ,
× RELATED போதைக்கு எதிராக எஸ்பி விழிப்புணர்வு