×
Saravana Stores

பெரம்பலூர் பாரத சாரண, சாரணியர் நிறுவனர் நாள் விழா

பெரம்பலூர்,நவ.8: பெரம்பலூர் மற்றும் வேப்பூர் கல்வி மாவட்ட பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பில், பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் 75ஆவது ஆண்டு நிறுவனர் நாள் விழா நேற்று(7ம்தேதி) வியாழக்கிழமை, பெரம்பலூர் துறையூர் சாலையிலுள்ள மாவட்ட சாரண,சாரணியர் கூட்ட அரங்கத்தில் கொண்டாடப் பட்டது. பாரத சாரண சாரணியர் இயக்கம் தேசிய அளவில் 1950ம் ஆண்டு நவம்பர் 7ம்தேதி உருவாக்கப் பட்டது. இந்த நாளின் நினைவாக நேற்று பெரம்பலூர் மாவட்ட சாரண, சாரணியர் இயக்க பயிற்சி மையத்தில் சர்வ சமய வழிபாடு நடத்தப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆலம்பாடி அரசு ஆதி திராவிடர்நல உயர்நிலைப் பள்ளி, பெரம்பலூர் புனித ஜோசப் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த சாரண,சாரணியர்கள் குருளையர்கள் மற்றும் நீல பறவையர்கள் 75 பேர் கலந்து கொண்டனர். மற்றும் பெரம்பலூர் மாவட்ட த்தை சேர்ந்த சாரண ஆசிரியர்கள் சாரணிய ஆசிரியைகள் குருளையர் ஆசிரி யர்கள் நீலப் பறவையர் ஆசி ரியை கள் எனமொத்தம் 106பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சாரண ஆசிரியர் ஆசிரியைக ளுக்கு பள்ளிகளில் சாரண இயக்கத்தில் செய்ய வேண்டிய பணிகள், நிறுவன நாள், இயக்க வரலாறு, திருச்சியில் இவ்வாண்டு கொண்டாடப் படவுள்ள 75 ஆம் ஆண்டு வைர விழா, தேசிய பெருந்திரளணி, ராஜ்ய புரஸ்கார் மற்றும் ராஷ்டிரபதி விருதுகளுக்கு மாணவர்களை பதிவு செய்தல் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப் பட்டது. நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட பாரத சாரண, சாரணியர் இயக்க முதன்மை ஆணையரும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான முருகம்மாள் கலந்து கொண்டு சாரண ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிப் பேசுகையில், மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவராக திகழ்வதற்கு சாரண இயக்கம் போன்ற கல்வி இணைச் செயல்பாடுகளில் மாணவர்கள் சேர்ந்து பயிற்சி பெறவேண்டும். சாரண ஆசிரியர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை மாணவர்க ளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெரம்பலூர் மாவட்ட சாரண ஆணையர் (மூத்தோர் வளம்) செல்வராசு, மாவட்ட தலைமையகத்து ஆணையர் மாய கிருஷ்ணன், சாரண இயக்க ஆலோசகர் வேணு கோபால், பெரம்பலூர் பயிற்சி ஆணையர் காமராஜ், அமைப்பு ஆணையர்கள் குணாளன், சரஸ்வதி, வேப்பூர் சாரண மாவட்ட பயிற்சி ஆணையர் சந்திரசேகர், கல்பனா, அமைப்பு ஆணையர்கள் ஞானகுரு, ஜான்சி ராணி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். முன்னதாக வேப்பூர் சாரண மாவட்ட செயலாளர் தனபால் வரவேற்றார். முடிவில் பெரம்பலூர் சாரண மாவட்டச் செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

The post பெரம்பலூர் பாரத சாரண, சாரணியர் நிறுவனர் நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Bharat Charana ,Saraniyar Founder's Day ,Veypur Education District ,Bharat Sarana Saraniyar Movement ,75th Founder's Day of Bharat Sarana Saraniyar Movement ,District Sarana Saraniyar Assembly Hall ,Perambalur Sharayur Road ,Perambalur Bharat Sarana Saraniyar Founder's Day Celebration ,Dinakaran ,
× RELATED போதைக்கு எதிராக எஸ்பி விழிப்புணர்வு