- பெரம்பலூர்
- வாலிகண்டபுரம் அரசு பள்ளி
- சின்னசாமி
- பெரம்பலூர் கலை இலக்கியப் பேரவை
- வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி
- பெரம்பலூர் மாவட்டம்
- வேப்பந்தட்டை தாலுகா
- வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி
பெரம்பலூர், நவ.10: வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ”தமிழ்க் கூடல்” நிகழ்ச்சியில் பெரம்பலூர் கலை, இலக்கிய பெருமன்றத்தின் மாவட்டத்தலைவர் சின்ன சாமி கலந்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வாலிகண்டபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் நேற்று (9ஆம்தெதி) சனிக்கிழமை தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராசு தலைமையேற்று மாணவர் களின் தனித் திறன்களை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை நடத்தும் தமிழ்க் கூடல், மகிழ் முற்றம், வானவில் மன்றம் போன்றவற்றின் வாயிலாக மாணவர்கள் தங்கள் தனித் திறமைகள் மற்றும் படைப் பாற்றல் திறன்களை மேம் படுத்திக் கொள்ள வேண்டும்என்று பேசினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரம்ம தேசம் பள்ளியின் பட்டதாரி ஆசிரியரும், பெரம்பலூர் கலை, இலக்கிய பெருமன்றத்தின் மாவட்ட தலைவருமான சின்ன சாமி ”தமிழர் இசை” என்ற தலைப்பில் தொல்காப்பியம் காலம் தொட்டு இன்றைய நாள் வரை தமிழிசையின் சிறப்புகளை பதிவுசெய்த இலக்கியங்களையும், சான்றோர்களையும் இசையோடு பாடி உரையாற்றினார்.ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பாண்டித்துரை தமிழின் தொன்மை குறித்த செய்திகளை விளக்கிப் பேசினார். வட்டார அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர்கள் வீரையன், அகிலாண்டேஸ்வரி, லதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முது கலைத் தமிழாசிரியர் மோகன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். முன்ன தாக பட்டதாரி தமிழ் ஆசிரியை அலமேலு வரவேற்றார். முடிவில் பட்டதாரி தமிழாசிரியை மகாலட்சுமி நன்றி கூறினார்.
The post பெரம்பலூரில் ஒருங்கிணைந்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு: வாலிகண்டபுரம் அரசு பள்ளியில் ”தமிழ்க் கூடல்” நிகழ்ச்சி appeared first on Dinakaran.