×

பக்தர்களை காக்கும் பக்த அனுமன்

‘‘ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்
வாபத் கநவாரகம்
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜ
நேயம் நமாம்யஹம்’’

எல்லா உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு கோதண்டராமர் – சீதாதேவி, லக்குமணருடன், அருள்தரும் ருக்மணி சத்யபாமா – ஸ்ரீவேணுகோபாலருடன் குடிகொண்டுள்ள திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த சென்னை, நங்கநல்லூர், ராம்நகரில் அமைந்துள்ள ஆலயத்தில், அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் விஸ்வரூபியாக பக்தர்களுக்கு காட்சி தருவது இத்திருத்தலத்தில் மட்டுமே உள்ள சிறப்பம்சமாகும். ஸ்ரீராம ரட்சை மற்றும் பூர்ண வடைமாலை தரிசனத்திற்கு சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில், ஸ்ரீஅனுமன் ஜெயந்தி பெருவிழா இவ்வாண்டும் நிகழ்ச்சி நிரல்படி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

அதன் படி ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு, லட்சார்ச்சனை 31.12.2023 முதல் 12.01.2024 வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக 06.01.2024 இன்று சந்தனகாப்பு அலங்கார தரிசனமும், ஞாயிற்றுக்கிழமை 07.01.2024 பால் அபிஷேகம், அன்று மாலை யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி 11.01.2024 அன்று ஸ்ரீஅனுமன் ஜெயந்தி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மறு நாள் 12.01.2024 வெள்ளி அன்று லட்சார்ச்சனை பூர்த்தியுடன், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு கண்டருள்வார். இதில் பக்தர்கள் கலந்துகொண்டு,ராம பக்த அனுமானின் அருளை பெறுங்கள்.

தொகுப்பு: குடந்தை நடேசன்

The post பக்தர்களை காக்கும் பக்த அனுமன் appeared first on Dinakaran.

Tags : Devotee Hanuman ,Sarva ,Kalyana Dadaram ,Kanavarakam ,Apara Karunamurthym ,Anja Neyam Namamyaham ,Kothandaram ,Sita Devi ,Lakumana ,Rukmini Satyabama - ,Srivenugopalar ,Devotee ,Hanuman ,
× RELATED திருச்சியில் 2 கோயில்களின் பூட்டை உடைத்து நகை திருட்டு