×

ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.11.25 லட்சம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

திண்டுக்கல், ஜன. 9: திண்டுக்கல்லில் ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.11.25 லட்சத்தை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரிடம் ஆன்லைனில் கமிஷன் அடிப்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக பேசி முதலீடு செய்யுமாறு கூறியதை நம்பி ரூ.11.25 லட்சம் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

பின்னர் அவர்கள் முறைகேடாக தன்னிடமிருந்து பணம் பெற்றதை அறிந்த பாதிக்கப்பட்ட நபர் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவுப்படி, ஏடிஎஸ்பி சந்திரன் மேற்பார்வையில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுத்து இழந்த பணம் ரூ.11.25 லட்சத்தை மீட்டனர். இதனை தொடர்ந்து நேற்று மாவட்ட எஸ்பி பிரதீப் பாதிக்கப்பட்ட நபரரை நேரில் அழைத்து ஒப்படைத்தார்.

The post ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.11.25 லட்சம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,District Cybercrime Police ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு