×

‘ஒடிசா-ஒடியா மக்களுக்கே’ காங்கிரசின் புதிய கோஷம்

புவனேஸ்வர்: ‘ஒடிசா ஒடியா மக்களுக்கே’’ என்ற கோஷத்தை காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது. ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜேடி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் தொடர்ந்து 5 முறை அவர் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு மாநில சட்ட பேரவை தேர்தல் நடக்கிறது. வரும் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரமாக செயலாற்றி வருகிறது. மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜோய்குமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஒடிசாவில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளது.

அரசியல்,பொருளாதாரம் மற்றும் அதிகாரிகள் என அனைத்திலும் ஒடியா மக்களின் முக்கியத்துவம் குறைந்து வெளி மாநிலத்தவர் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ரூ.35,000 கோடி கான்ட்ராக்ட் வெளி மாநிலத்தவருக்கு விடப்பட்டுள்ளது. ஒடிசாவில் கான்ட்ராக்டர்கள் யாரும் கிடையாதா?. வெளி மாநிலத்தை சேர்ந்தவர் மூலம் தான் மாநிலம் வழிநடத்தப்படுகிறது. மாநிலத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாரும் இல்லையா? ஏன் இந்த நிலைமை. ஒடிசாவின் பணம் வெளி மாநிலத்தவர்களின் கைகளுக்கு செல்கிறது. இதனால் தான் மாநிலம் ஏழ்மையாகவே இருக்கிறது.

மாநில அரசின் விவகாரங்களில் வெளி மாநிலத்தவர்களை ஈடுபட வைத்து மாநில நலனுக்கு எதிராக பிஜேடி, பாஜ கட்சிகள் செயல்படுகின்றன. எனவே, ஒடிஷா ஒடியா மக்களுக்கே என்ற பிரசாரத்தை வலியுறுத்துவோம்’’ என்றார். ஒடிசா முதல்வரின் செயலாளராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் அண்மையில் பதவி விலகி ஆளும் பிஜு ஜனதா தள கட்சியில் இணைந்துள்ளார். அவரை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்த முதல்வர் நவீன் பட்நாயக் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், ஒடிசா ஒடியா மக்களுக்கே என்ற கோஷத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

The post ‘ஒடிசா-ஒடியா மக்களுக்கே’ காங்கிரசின் புதிய கோஷம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Bhubaneswar ,BJD ,Chief Minister ,Naveen Patnaik ,Odisha ,
× RELATED பாஜவில் சேர்ந்த 2 பிஜேடி எம்எல்ஏக்கள்...