×

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

கமுதி, ஜன.7: கமுதி அருகே செந்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி(55). நேற்று கமுதியில் இருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆட்டோ ஓட்டி சென்ற முனியசாமி புதுக்கோட்டை அருகே மணல்மேட்டின் மீது ஏறி, ஆட்டோ கவிழ்ந்ததில் இறந்தார். கூட்டுக்குடிநீருக்காக குழி தோண்டிய பள்ளத்தால் விபத்து நடந்துள்ளது என்று, முனியசாமியின் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட முனியசாமியின் உடலை வாங்க மறுத்து கமுதி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்பு முனியசாமி உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.

The post ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Muniyaswamy ,Senthanendal ,Pudukottai ,Muniyasamy ,
× RELATED கமுதி பேரூராட்சியில் புதுப்பொலிவு பெறும் சிறுவர் பூங்கா