×

வங்க தேசத்தில் கோலபாக் பகுதியில் சென்றபோது பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து: 5 பேர் பலி

வங்கதேசம்: வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் இருந்து, மேற்கு பகுதியில் உள்ள ஜெஸ்ஸோர் நகருக்கு பெனாபோல் அதிவிரைவு இரயில் பெனாபோல் எக்ஸ்பிரஸ் பயணம் செய்தது. இந்த இரயில் அங்குள்ள சயதாபாத், கோலபாக் பகுதியில் சென்றபோது, இரயில் திடீரென தீப்பிடித்ததாக தெரியவருகிறது.

வங்க தேசத்தின் வடக்கு நகரமான ஜெச்சூரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தலைநகர் தாகா நோக்கி வந்துகொண்டிருந்த போது திடீரென தீ பற்றி எரிந்தது. குறைந்தது நான்கு பெட்டிகளாவது தீ பிடித்து எரிந்தது. தீ விபத்து ஏற்பட்டதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவலை கொடுத்தனர். அது மட்டுமின்றி தீயணைப்பு துறையினர் வருவதற்குள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பயணிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயைனைக்கும் பணிகளில் ஈடுபட்டு பயணிகளை மீட்டனர்.

இதனால் பதறிப்போன பயணிகள் அதிர்ந்துபோன நிலையில், நடுவழியில் இரயில் நிறுத்தப்பட்டது. பலரும் அவசர கதியில் இரயில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தில், 5 பயணிகள் இரயிலுக்குள்ளேயே சிக்கியதாக தெரியவருகிறது. இதனால் அவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீயில் சிக்கி 5 பேர் பலி, ஒரு இளைஞர் மட்டும், விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டு, தானும் தீயின் பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரயிலின் 4 பெட்டிகள் அடுத்தடுத்து தீப்பிடித்ததை தொடர்ந்து, பிற பெட்டிகள் தீப்பிடித்த பெட்டியில் இருந்து பிரிக்கப்பட்டன, இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

The post வங்க தேசத்தில் கோலபாக் பகுதியில் சென்றபோது பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து: 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Sudden ,Golabakh ,Bangladesh ,Express ,Dhaka ,Jessore ,Sayadabat ,Golabagh ,Bengal ,Dinakaran ,
× RELATED ஆப்கான் மசூதியில் திடீர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி