- அன்னூர் பிராந்தியம்
- அன்னூர்
- அன்னூர் மாவட்டம்
- பொன்னகௌந்தன் புத்தூர்
- தெலுங்கபாளையம்
- பிள்ளையாப்பம் பாளையம்
- குப்பேபாளையம்
- பசுர்
- கேரளா…
- அன்னோர்
அன்னூர், ஜன.6: அன்னூர் வட்டாரத்தில் பொன்னேகவுண்டன் புதூர், தெலுங்குபாளையம், பிள்ளையப்பம் பாளையம், குப்பே பாளையம், பசூர் உள்ளிட்ட பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நேந்திரன், கதலி, ரோபஸ்டோ உள்ளிட்ட ரக வாழைத்தார்கள் விளைவிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. குறைந்த அளவில் உள்ளூர்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக வாழையில் இலை கருகல் நோய் அதிகரித்துள்ளது.
இதனால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயி சுந்தரமூர்த்தி கூறுகையில், ‘‘நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழை மரங்களில் இலை கருகல் நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோயால் வழக்கமாக 20 கிலோ விளைச்சல் வருகிற வாழைத்தார், வெறும் 10 கிலோ எடை மட்டுமே வருகிறது. அதிலும் தண்டுக்காக வியாபாரிகள் இரண்டு கிலோ எடையை கழித்து கொள்கின்றனர். தற்போது வாழைத்தார் விலையும் குறைவாக உள்ளது. விளைச்சலும் பாதியாக சரிந்து விட்டதால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது’’ என்றார்.
The post அன்னூர் பகுதியில் இலை கருகல் நோய் வாழை விவசாயம் பாதிப்பு appeared first on Dinakaran.