×

15 இந்தியர்கள் உட்பட 21 மாலுமிகள் பத்திரமாக மீட்பு நடுக்கடலில் கடத்தப்பட்ட கப்பலை அதிரடியாக மீட்டது இந்திய கடற்படை: கடற்கொள்ளையர்கள் தப்பியோட்டம்

புதுடெல்லி: அரபிக் கடலில் கடத்தப்பட்ட வர்த்தக கப்பலில் சிக்கியவர்களை விரைந்து செயல்பட்டு இந்திய கடற்படை மீட்டுள்ளது. அரபிக்கடல் பிராந்தியத்தில் மத்திய ஆப்பிரிக்காவை சேர்ந்த சோமாலியா கடல் பகுதியில் 15 இந்திய ஊழியர்களுடன் லைபீரிய கொடியுடன் சென்று கொண்டிருந்த மிகப் பெரிய வர்த்தக கப்பலான எம்வி.லைலா நார்வோல்க் நேற்று முன்தினம் 5 பேர் கொண்ட கடற்கொள்ளை கும்பலால் கடத்தப்பட்டது. இது குறித்து உடனடியாக இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விரைந்து செயல்பட்ட இந்திய கடற்படை அதிகாரிகள் சரக்குக் கப்பல் இருக்கும் இடத்தை நோக்கி இந்திய கடற்படை விமானத்தை அனுப்பியதுடன், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடல்சார் பாதுகாப்புக்கு உதவும் ஐஎன்எஸ் சென்னை போர் கப்பலையும் அனுப்பினர்.

இந்திய கடற்படை விமானம், கடத்தப்பட்ட கப்பல் இருக்கும் இடத்தை நேற்று அதிகாலை கண்டறிந்து அதனை கண்காணித்தது. மேலும், கப்பலுக்குள் உள்ளவர்களை தொடர்பு கொண்டு அவர்களது பாதுகாப்பை உறுதி செய்தது.
மேலும், போர் விமானத்தில் இருந்து ஹெலிகாப்டரை அனுப்பி கடற்கொள்ளையர்கள் கப்பலில் இருந்து உடனடியாக வெளியேறும்படி எச்சரித்தது. பின்னர், விரைவு படகு மூலம் கப்பலை நெருங்கிய இந்திய கடற்படையின் எலைட் கமாண்டோ பிரிவினர் கயிறு ஏணி மூலம் கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அதில் சிக்கி இருந்த 15 இந்திய ஊழியர்கள் உள்ளிட்ட 21 மாலுமிகளையும் மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் மீட்பு நடவடிக்கையின் போது கப்பலில் இருந்த கடற்கொள்ளையர்கள் தங்களது முயற்சியை கைவிட்டு தப்பியதாக மீட்பு பணியில் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 15 இந்தியர்கள் உட்பட 21 மாலுமிகள் பத்திரமாக மீட்பு நடுக்கடலில் கடத்தப்பட்ட கப்பலை அதிரடியாக மீட்டது இந்திய கடற்படை: கடற்கொள்ளையர்கள் தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Tags : Indian Navy ,New Delhi ,Arabian Sea ,Somali region of Central Africa ,Pirates ,
× RELATED அரபிக்கடலில் 940 கிலோ போதைப் பொருள் பறிமுதல்..!!