×

இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 22ம் தேதி வெளியீடு

சேலம், ஜன.5: சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி 2024ம் ஆண்டிற்கான புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி வௌியிடப்பட்டு சிறப்பு சுறுக்கமுறை திருத்தத்திற்கான பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி அக்டோபர் 27ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுறுக்கமுறை திருத்த பணிகளுக்கான படிவங்கள் பெறப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் 5ம் தேதி (இன்று) வௌியிடப்படுவதற்கு பதிலாக, வரும் 22ம் தேதி வௌியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 22ம் தேதி வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem District ,Collector ,Karmegam ,Election Commission of India ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...