திங்கள்சந்தை, ஜன.4: வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெபாஸ்டர்ஸ் கிரேசிராஜ் (47). மாற்றுத்திறனாளி. சம்பவத்தன்று வெளியே சென்றுவிட்டு மாலை வீட்டின் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த எட்வின் வில்பர்ட் (37) என்பவர் முன்விரோதம் காரணமாக ஜெபாஸ்டர்ஸ் கிரேசிராஜை தடுத்து நிறுத்தி அவதூறாக பேசியதாக தெரிகிறது. தொடர்ந்து ஜெபாஸ்டர்ஸ் கிரேசிராஜின் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் ₹.10 ஆயிரம் அளவில் காம்பவுண்ட் சுவர் சேதமடைந்தது. இதை தட்டிக் கேட்ட ஜெபாஸ்டஸ் கிரேசிராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்த எட்வின் வில்பர்ட் அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து ஜெபாஸ்டர்ஸ் கிராசிராஜ் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் எட்வின் வில்பர்ட் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.
The post வில்லுக்குறி அருகே மாற்றுத்திறனாளிக்கு கொலை மிரட்டல் appeared first on Dinakaran.