×

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய குஜராத் ஏஜென்ட்டுகளுக்கு ரூ.80 லட்சம் பேரம்

அகமதாபாத்: நிகரகுவாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக குஜராத் பயணிகள் 66 பேர் உள்ளூர் ஏஜென்ட்டுகளுக்கு ரூ.80லட்சம் பேரம் பேசியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. துபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா நோக்கி கடந்த மாதம் 21ம் தேதி தனி விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 260 இந்தியர்கள் உட்பட 303 பயணிகள் இருந்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே இருக்கும் வத்ரி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் ஆள் கடத்தல் நடப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம், 4 நாட்களுக்கு பின் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது. டிசம்பர் 26ம் தேதி இந்த விமானம் மும்பை வந்தது. இதில் இருந்தவர்களில் 66பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்.

இது குறித்து மாநில சிஐடி குற்றம் மற்றும் ரயில்வே காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் காரத் கூறுகையில், ‘‘நிகரகுவா விமானத்தில் இருந்தவர்களில் 66 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் 8 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள். இவர்களில் 55 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய உதவுவதற்காக குடியேற்ற ஏஜென்ட்டுகளுக்கு ரூ.60 லட்சம் முதல் 80லட்சம் வரை தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்” என்றார்.

The post சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய குஜராத் ஏஜென்ட்டுகளுக்கு ரூ.80 லட்சம் பேரம் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,US ,AHMEDABAD ,United States ,Nicaragua ,Dubai ,Central American ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...