×

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு


டெல்லி: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி ஓட்டுநர்களுக்கு பேச்சுவார்த்தைக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்தது. பாரத நியாய சன்ஹிதா குற்றவியல் சட்டத்தில் விபத்து தொடர்பான விதிமுறைக்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அகில இந்திய மோட்டார் காங். நிர்வாகிகளுடன் ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

The post புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் லாரி ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!