×

டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!

டெல்லி: டெல்லி அலிபூரில் அமைந்திருக்கக்கூடிய ரெசார்ட்டில் தீ விபாடு ஏற்பட்டுள்ளது. தீவிரமாக பரவக்கூடும் என்ற நிலையில் அந்த பகுதியில் மக்கள் சிக்கியுள்ளாரா போன்ற சோதனையில் டெல்லி காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக சார்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு. உடனடியாக 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிர்வாகத்தின் சார்பில் விருந்து நடைபெறும் அந்த அறையில் ,மின் கசிவு காரணமாக இத்தகைய தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இத்தகைய தீ விபத்தின் காரணம் குறித்து தீயணைப்பு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் வெப்பமானது அதிகரித்து காணப்படுகிற நிலையில் இது போன்ற தீ விபத்துகள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Carnival ,Alipur, Delhi ,Delhi ,Delhi Alipur ,Delhi Police ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து