×

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 14 நாட்களுக்கு பின்னர் மின்உற்பத்தி

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் வெள்ள நீர் புகுந்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் 14 நாட்களுக்குப் பின் தற்போது 5வது அலகில் மின் உற்பத்தி நேற்று முதல் தொடங்கியது. தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் தூத்துக்குடி தெர்மல்நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்களில் இருந்து சுமார் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 17 மற்றும் 18ம் தேதி ஆகிய 2 நாள்களில் பெய்த கனமழை காரணமாக, மின் நிலைய வளாகத்தில் வெள்ள நீர் சூழ்ந்தது.

இதைத்தொடர்ந்து மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்களிலும் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வந்ததது. அதுபோல் மின் உற்பத்தியை தொடங்குவதற்காக அனைத்து பணிகளும் நடைபெற்று வந்தன. 18ம் தேதியில் இருந்து 5 மின் உற்பத்தி யூனிட்டுகளும் இயங்காமல் இருந்து வந்தன. தற்போது, 14 நாட்களுக்கு பின்னர் 5வது யூனிட் மட்டும் சரி செய்யப்பட்டு நேற்று மின் உற்பத்தி துவங்கியது. இதில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது. மற்ற 4 யூனிட்களையும் சரிசெய்யும் பணி நடைபெற்றுவருவதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 14 நாட்களுக்கு பின்னர் மின்உற்பத்தி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Thermal ,Power Plant ,Tuthukudi ,Thoothukudi thermal power station ,Tamil Nagar ,Thoothukudi Thermalnagar ,Tuticorin Thermal Power Station ,Dinakaran ,
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில்...