- விஜயகாந்த்
- அன்டியூர்
- விஜயகாந்த்
- பிற்பகுதியான தேசிய முற்போக்கான
- சட்டமன்ற உறுப்பினர்
- பத்ரகாளியம்மன் கோயில் திண்டல்
அந்தியூர், ஜன.1: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மறைந்த தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவன தலைவர் விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து கட்சியினர் சார்பில் மௌன ஊர்வலம் நடந்தது. பத்ரகாளியம்மன் கோயில் திடலில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை எம்எல்ஏ அந்தியூர் ஏசி வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.
அந்தியூரின் பர்கூர் ரோடு, ஜிஹெச் கார்னர், தேர் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உருவப்படத்திற்கு எம்எல்ஏ அந்தியூர் வெங்கடாசலம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மேலும் திமுக பேரூர் கழக செயலாளர் காளிதாஸ், அதிமுக நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம், தேமுதிக மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் சுதாகர், சிபிஎம் கட்சி தாலுகா செயலாளர் முருகேசன், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணை தலைவர் பழனிச்சாமி, தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், அதிமுக மண்டல தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் கே. எஸ்.மோகன்குமார், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் நாராயணன், தேவராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் குருராஜ் மற்றும் தேமுதிக, திமுக, அதிமுக, பாமக, உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
The post விஜயகாந்த் மறைவையொட்டி அனைத்து கட்சிகள் மௌன ஊர்வலம் appeared first on Dinakaran.