×

ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு அகத்திய பெருமானுக்கு அபிஷேக, ஆராதனை

 

நீடாமங்கலம், டிச. 31: ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு, நீடாமங்கலம் அருகே சதுரங்கவல்லபநாதர் சுவாமி கோயிலில் மாதந்தோறும் அகத்திய பெருமானுக்கு ஹோமம் செய்து அபிஷேக ஆராதனை நடைபெறுவது வழக்கம். இதேபோல ஆயில்ய நட்சத்திரமான நேற்று அகத்திய பெருமானுக்கு ஹோமம் செய்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் மானாமதுரை  மஹாபஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின் சாக்த மடாலய ஞானசேகர சுவாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார். வெள்ளி கவசத்தில் அகத்திய பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

The post ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு அகத்திய பெருமானுக்கு அபிஷேக, ஆராதனை appeared first on Dinakaran.

Tags : Lord Agathya ,Aailya ,Needamangalam ,Lord ,Agathiya ,Chaturangavallabanathar Swamy Temple ,Neetamangalam ,Ailya ,Ailya Nakshatra ,
× RELATED நீடாமங்கலத்தில் புதிய ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கல்