×

திருவாரூர் ஆர்டிஓ அலுவலகம் முன் கிராம உதவியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

திருவாரூர், டிச.30: அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட கோரி கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர்களுக்கு பயணப்படி வழங்கிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் பொங்கல் போனஸ் தொகை ரூ.7 ஆயிரம் வழங்கிட வேண்டும்.

விஏஓ பதவி உயர்வு பெறுவதற்கு 10 ஆண்டுகள் பணி மூப்பு என்பதை 6 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று ஆர்டிஓ அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் முன்னாள் மாவட்ட பொருளாளர் அப்பாசாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் நிறுவனர் தமிழ்ச்செல்வன் மற்றும் பொறுப்பாளர்கள் முருகையன், குணசேகரன், சந்திரன், மாயகிருஷ்ணன், வளர்மதி, சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவாரூர் ஆர்டிஓ அலுவலகம் முன் கிராம உதவியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Village Helpers Association ,Tiruvarur RTO ,Thiruvarur ,Village Helper Association ,
× RELATED பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்