×

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அனுமதியில்லாத கேளிக்கை விடுதிகள் செயல்பட கூடாது: காரைக்குடி ஏஎஸ்பி உத்தரவு

 

காரைக்குடி, டிச. 30: காரைக்குடியில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களுடனான ஏஎஸ்பி கலந்தாய்வு கூட்டம் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் ஏஎஸ்பி ஸ்டாலின் கூறுகையில், ‘‘காரைக்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களை தவிர ஒரு ஒரு சிலர் வாகனங்களில் போலியாக பிரஸ் ஸ்டிக்கர்கள் ஒட்டியுள்ளது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தங்களது வாகனங்களில் ஒட்டியுள்ள ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும். மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்லூரி சாலை, பாரி நகர், ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட பகுதியில் வாகனங்களில் அதிவேகத்தில் செல்வோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தில், டூவீலர்களில் செல்வோர் எவ்வித அசம்பாவித செயலிலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ நடந்துகொள்ள கூடாது. சாலை நடுவில் கேக் வெட்டுவது, வெடி வெடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. அனுமதியின்றி கேளிக்கை விடுதிகள் செயல்பட கூடாது. பிள்ளையார்பட்டிக்கு பெருமளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு பணியில் அதிகளவில் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள்’’ என்றார்.

The post புத்தாண்டு கொண்டாட்டத்தில் அனுமதியில்லாத கேளிக்கை விடுதிகள் செயல்பட கூடாது: காரைக்குடி ஏஎஸ்பி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : New Year ,Karaikudi ,ASP ,Assistant Superintendent ,Stalin ,
× RELATED காரைக்குடியில் கிணற்றுக்குள் விழுந்த மாற்றுத்திறனாளி இளைஞர்..!!