×

கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கைகோரி ஈத்தாமொழியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஈத்தாமொழி, டிச. 30 : ஈத்தாமொழி பகுதியில் அப்பாவி ஏழை பெண்களை மிரட்டி அச்சுறுத்தி அநியாய வட்டி வசூல் செய்து வரும் கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஈத்தாமொழி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சிவகோபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் ஆகியோர் பேசினர். மாவட்ட குழு உறுப்பினர்கள் பெருமாள், ரெகுபதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமரேசன், மிக்கேல் நாயகி, அம்பிகா, கோபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கைகோரி ஈத்தாமொழியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Marxist ,Ethamozhi ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்