×

ஆப்பிள் ஐஸிங் கேக்

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் 1 கிலோ.
மைதா 1 கிலோ.
வெண்ணெய் 600 கிராம்.
ஐஸிங் சர்க்கரை 500 கிராம்.
மில்க் மெய்ட் 100 கிராம்.
பால் 150 மிலி.
சர்க்கரை 250 கிராம்.
பட்டைத்தூள் 10 கிராம்.
பிரெட் தூள் 250 கிராம்.

செய்முறை:

ஆப்பிள் ஐசிங் கேக் செய்வதற்கு வெண்ணெய், சர்க்கரை, மில்க்மெய்ட், பால், மைதா மாவு ஆகிய அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஆப்பிள் தோலை நீக்கிப் பொடிப்பொடியாக நறுக்கி, அதனுடன் சர்க்கரை, பட்டைத்தூள், வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். வேக வைத்த ஆப்பிளுடன் பிரெட் தூளைச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிறகு அந்தக் கலவையை தடிமனாகும் வரை உருட்டி, வட்டமான ஒரு மோல்டில் வெண்ணெய் தடவி உருட்டிய மாவை வைத்து, அதன் மேல் ஆப்பிள் கலவையை வைக்கவும். இதன் மேல் மில்க் மெய்டை பரவலாக சேர்த்து, மைக்ரோவேவ் ஓவனில் 180 டிகிரி சென்டிகிரேடில் 40 நிமிடங்கள் வைத்து எடுத்தால் ஆப்பிள் ஐஸிங் கேக் தயார்.

 

The post ஆப்பிள் ஐஸிங் கேக் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சாமை மிளகு பொங்கல்