×

இறக்குமதியை குறைத்து பெட்ரோல், டீசல், இறக்குமதியை நிறுத்தும் வரை தீவிரவாதம் ஓயாது: நிதின் கட்கரி பேச்சு

பனாஜி: ‘ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியை குறைப்பதே தேசபக்திக்கான புதிய பாதை. பெட்ரோல், டீசல், இறக்குமதியை நிறுத்தாத வரை, உலகம் முழுவதும் தீவிரவாதம் ஓயாயது என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார். வாவின் பனாஜியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: ட்ரோல், டீசல் இறக்குமதியை நிறுத்துவது, உலகில் தீவிரவாதத்தை தடுத்து நிறுத்துவதற்கு சமமானது. பெட்ரோல், டீசல், இறக்குமதியை நிறுத்துவதே என் வாழ்க்கையின் நோக்கம். இந்த இறக்குமதியை நிறுத்தாத வரை, உலகம் முழுவதும் தீவிரவாதம் நிற்காது. ஒரு துளி பெட்ரோல், டீசல் கூட இறக்குமதி செய்யப்படாமல் இருப்பதுதான் இந்தியாவுக்கு கிடைக்கும் புதிய சுதந்திரமாக கருதுகிறேன்.

தற்போது பெட்ரோல், டீசல் இறக்குமதி செலவு ரூ.16 லட்சம் கோடியாக இருக்கிறது. இறக்குமதியை குறைத்தால், நாம் சேமிக்கும் பணம் ஏழைகளுக்கு செல்லும். அதனால்தான் மாற்று எரிபொருளை அறிமுகப்படுத்தி உள்ளோம். இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிப்பதே தேசபக்தி மற்றும் சுதேசிக்கான புதிய பாதை. கடந்த 2014ல் நான் அமைச்சராக பொறுப்பேற்ற போது, இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் வருவாய் ரூ.7 லட்சம் கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.12.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இத்துறையின் மூலம் 4.5 கோடி பேர் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அதிக ஜிஎஸ்டியை அள்ளித் தருவதும் இத்துறைதான்.

அதிகபட்ச இறக்குமதிகள் ஆட்டோமொபைல் துறையில் நடக்கிறது. இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாகி உலகை தலைமை ஏற்றுச் செல்ல விரும்பினால், ஏற்றுமதியில் முதலிடம் பெற வேண்டும். ஆட்டோமொபைல் ஏற்றுமதி துறையில் 3 மாதத்திற்கு முன், ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளை பின்னுக்கு தள்ளி, இந்தியா 7வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. எங்கள் முயற்சியின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் முதலிடத்தில் இருப்போம் . இவ்வாறு அவர் கூறினார்.

The post இறக்குமதியை குறைத்து பெட்ரோல், டீசல், இறக்குமதியை நிறுத்தும் வரை தீவிரவாதம் ஓயாது: நிதின் கட்கரி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Nitin Gadkari ,Panaji ,
× RELATED தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி