×

குளிர்கால சரும பராமரிப்புக்கான எளிய வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

குளிர்காலம் நெருங்க நெருங்க, சரும பராமரிப்புக்கும் அதிகம் கவனம் தேவைப்படுகிறது. உதாரணமாக, வறண்ட சருமம், மெல்லிய தோல், உதடு வெடிப்பு உள்பட குளிர்காலம் தொடர்பான பல்வேறு சரும பிரச்சினைகள் இருக்கும். அவற்றிலிருந்து சருமத்தை பாதுகாத்து ஆரோக்யமாகவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் இதோ:

உதடோ, சருமமோ எந்த அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவதாக இருந்தாலும் குளிர்காலங்களில் குறைவாகவே பூச வேண்டும். அதிகம் பூசுவதால் ஈரப்பதமான சருமமாக மாறாது. மாறாக தோல் சுவாசிக்க முடியாமல், இறுதியில் சருமம் சேதமடையக்கூடும்.குறிப்பாக குளிர்காலத்தில் சருமங்களை பராமரிப்பதற்கு இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் .அடர் தன்மை கொண்ட கிரீம்களை பயன்படுத்துவதை விட லோஷன்களை பயன்படுத்துவது ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்.

வறண்ட மற்றும் எண்ணெய் பசை கொண்ட சருமங்களுக்கு இடையே ஒருசில மாறுபாடுகள்தான் இருக்கிறது.வறண்ட சருமத்தை ஒப்பிடும்போது எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்கவைக்க மென்மையான தன்மை கொண்ட லோஷன் தேவைப்படும்.ஒவ்வொரு சரும வகையும் வானிலை மாற்றங்களால் பாதிக்கப்படும். குளிர்ந்த காற்று சருமத்தை வறண்டு போகச் செய்துவிடும். இதற்கு எண்ணெய் சருமமும் விதிவிலக்கல்ல. அதனால் குளிர்காலத்தில் எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்க வைக்க எதுவும் பயன்படுத்த வேண்டியதில்லை என்பது தவறானது. சருமத்தின் தன்மைக்கு ஏற்ப சம நிலையை பராமரிக்கும் தன்மை கொண்ட மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவது நல்லது. அவை ஈரப்பதத்தை பராமரிப்பதற்கும், புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கும் உதவும்.

குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் என்று நினைத்தால் அது தவறானது. குளிர் சமயத்தில் சுடு நீர் குளியல் உடலுக்கு ஆறுதல் அளிக்கும். ஆனால் சருமத்தில் படர்ந்துள்ள இயற்கை எண்ணெய் பசைகளை அகற்றி சருமத்தை உலர்வடைய செய்துவிடும். மேலும், சருமத்திற்கு எரிச்சல் உணர்வையும் உண்டுபண்ணும். எனவே, அதிக சூட்டை உணரவைக்காத வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அதிகப்படியான ஈரப்பத இழப்பை தடுக்கும். இருப்பினும் சுடு நீர் குளியல் போடுவதாக இருந்தால் அதிக நேரம் குளிக்கக்கூடாது. அப்போதுதான் சருமம் ஈரப்பதத்துடன் மென்மையாக இருக்கும்.

தொகுப்பு: ரிஷி

The post குளிர்கால சரும பராமரிப்புக்கான எளிய வழிகள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dinakaran ,
× RELATED கோடைகால குழந்தைகள் பராமரிப்பு!