×

தியாகதுருகம் அருகே மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து சிறுவன் பலி

*10 பேர் படுகாயம்

தியாகதுருகம் : தியாகதுருகம் அடுத்த திம்மலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 15வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.சேலம் மாவட்டம் ஏற்காடு மலையடிவாரத்திலுள்ள ஆச்சாங்குப்பட்டி பகுதியிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த திம்மலை பகுதி அருகே பேருந்து வந்தபோது, அப்பகுதியில் நின்று ெகாண்டிருந்த மினி டெம்போ மீது எதிர்பாராதவிதமாக மோதி சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சேலம் ஆச்சாங்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் பாண்டியராஜன் (15) என்ற சிறுவன் பேருந்து கவிழ்ந்த வேகத்தில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு பேருந்துக்கு முன்பக்கமாக விழுந்துள்ளான். இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மேலும் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தகவலறிந்து வந்த தியாகதுருகம் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து மினிலாரி டிரைவர் ஈரோடு ஜல்லியூரை சேர்ந்த அருண்குமாரை கைது செய்தனர். மாலையணிந்து கோயிலுக்கு சென்றபோது விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post தியாகதுருகம் அருகே மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Melmaruvathur ,Thiagathurugam ,Padukayam Thyagathurugam ,Thimalai National Highway ,Dinakaran ,
× RELATED தியாகதுருகம் அருகே மாயமான 7 வயது சிறுவன் விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு