×

தியாகதுருகம் அருகே மாயமான 7 வயது சிறுவன் விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு

தியாகதுருகம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பிரிதிவி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் துரை மனைவி வித்தியா(28). இவர்களுக்கு திருமாறன் என்ற ஆண்குழந்தை இருந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு விளையாடுவதற்காக வெளியே சென்ற மகன் வெகு நேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அக்கம் பக்கம் உள்ளிட்ட பல இடங்களிலும் மற்றும் உறவினர் வீடுகளிலும் தேடியும் எங்கும் கிடைக்காததால் இதுகுறித்து உடனடியாக தியாகதுருகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகார் அளித்ததன் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் சிறுவன் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வந்தனர். இந்நிலையில் அருகில் உள்ள கிணற்றில் சிறுவன் தவறி விழுந்து இருக்கலாம் என்ற கோணத்தில் நேற்று முன்தினம் தீயணைப்பு வீரர்கள் மூலம் அதே பகுதியில் உள்ள கிணற்றில் இறங்கி இரவு முழுவதும் தேடினர். பின்னர் நேற்று சந்தேகத்தின் பேரில் அதே பகுதியில் உள்ள விக்கிரமாதித்தன் என்பவரது விவசாய கிணற்றில் கணினி தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கேமராவை பயன்படுத்திசோதனை செய்தனர்.

இதில் அந்த சிறுவனது உடல் இருப்பது தெரியவந்தது. பின்னர் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேர போராட்டதிற்கு பிறகு சிறுவனின் உடலை மீட்டனர். காணாமல் போன 7 வயது சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post தியாகதுருகம் அருகே மாயமான 7 வயது சிறுவன் விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Thiagadurugam ,Thiagathurugam ,Durai ,Vidhya ,Prithivi Mangalam ,Kallakurichi district ,Thirumaran ,
× RELATED தியாகதுருகம் அருகே பரபரப்பு ஐடிஐ...