×

கிறிஸ்துமஸ் 12 நாட்கள்!

நன்றி குங்குமம் தோழி

கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று. இந்த பண்டிகை 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது மட்டுமல்ல, கிறிஸ்துவ சமயத்தின் தியாகிகள், புனிதர்களுக்கு மரியாதை அளிக்கவும், படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இக்கொண்டாட்டம் இயேசுவின் பிறந்த தினம் தொடங்கி அடுத்த 12 நாட்கள் வரை நீடிக்கிறது.

*நாள் 1 – டிசம்பர் 25, இயேசு பிறந்த நாள் கிறிஸ்துமஸ் முதல் நாளாகக் கருதப்படுகிறது.

*நாள் 2 – செயின்ட் ஸ்டீபன் தினம். உயிர் துறந்த முதல் தியாகியான ஸ்டீபனின் நினைவாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

*நாள் 3 – இயேசுபிரானின் 12 சீடர்களில் இளையவரான புனித ஜான் அவர்களுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.

*நாள் 4 – அப்பாவிகள் தினம் அல்லது சைல்டர் மாஸ் என்று கூறப்படுகிறது. கிங் ஹநாடால் பெத்லகேமில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.

*நாள் 5 – புனிதராகவும், தியாகியாகவும் கருதப்பட்ட செயின்ட் தாமஸ் பெக்கட்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.

*நாள் 6 – பெனெடிக்டின் துறவியான செயின்ட் எக்வின் நினைவு நாள்.

*நாள் 7 – நியூகியர் ஈவ புத்தாண்டின் முந்தைய நாளாக நிகழ்ந்தாலும் இது 12ம் நாளின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

*நாள் 8 – புத்தாண்டாக இருந்தாலும் இயேசுவின் அன்னை மதர்மேரியின் நினைவாக கொண்டாடப்படுகிறது.

*நாள் 9 – செயின்ட் பேசில் செயின்ட் இரகோரி, நாசியான் சென் நினைவாக கொண்டாடப்படுகிறது.

*நாள் 10 – புனித இயேசுவின் பெயரால் விருந்து படைக்கப்பட்டு 10வது நாளாக கொண்டாடப்படுகிறது.

*நாள் 11 – கிறிஸ்துவ சகோதரர்களின் முதல் அமெரிக்க சபையான சிஸ்டர்ஸ் ஆஃப் சாரிட்டி நிறுவிய செயின்ட் எலிசபெத் ஆன் செடோனின் நினைவாக கொண்டாடப்படுகிறது.

*நாள் 12 – முதல் அமெரிக்க பிஷப் செயின்ட் ஜான் றியூமான் அவர்களின் நினைவாக கொண்டாடப்படுகிறது.

– எஸ். மாரிமுத்து, சென்னை.

The post கிறிஸ்துமஸ் 12 நாட்கள்! appeared first on Dinakaran.

Tags : Christmas ,Kumkum Doshi ,
× RELATED கிச்சன் டிப்ஸ்