×

பாஜக அலுவலகத்தில் காலி மது பாட்டில் வீச்சு

திண்டிவனம், டிச. 21: மயிலம் அருகே பாஜக கட்சி அலுவலகத்தில் காலி மது பாட்டில் வீசி, கட்சி கொடியை சேதப்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த சின்ன நெற்குணம் பகுதியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரமாக பாஜக விழுப்புரம் வடக்கு மாவட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் பக்கத்தில் உள்ள உணவகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்த 2பேர் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

கட்சி அலுவலகத்தில் கட்டப்பட்டிருந்த பாஜக கொடியை 2நபர்களும் கையில் வைத்திருந்த காலி மது பாட்டில்களை அலுவலக வாசலில் தூக்கி வீசியதுடன், அலுவலக முன்பு வைக்கப்பட்டிருந்த கட்சி கொடியையும் சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்த ரமேஷ்(32), அரிராமன்(28) ஆகிய இருவரும் மது அருந்திவிட்டு காலி பாட்டிலை வீசி பாஜக கொடியை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பாக இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பாஜக அலுவலகத்தில் காலி மது பாட்டில் வீச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Tindivanam ,Mylam ,Dinakaran ,
× RELATED திண்டிவனம் அருகே சாலை நடுவில் வேன் கவிழ்ந்து 14 பேர் காயம்..!!