அன்னூர், டிச.20: கோவை மாவட்டம்-அன்னூர் பேரூராட்சியில், தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமில் கலால் துறை துணை கலெக்டர் துரைமுருகன் துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணைத்தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். இதில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, தொகுப்பு வீடு, வியாபார கடன், மின்வாரியத்தில் டெபாசிட் தொகை திரும்ப பெறுதல், ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், ஆதார் கார்டில் திருத்தம், பட்டா மாறுதல், நில அளவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக 500க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.
முன்பதிவு மையம் இ-சேவை மையம் மற்றும் 13 துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இது குறித்து தாசில்தார் காந்திமதி கூறுகையில் ‘‘மனுக்கள் உடனுக்குடன் போர்டலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மனுக்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுகிறது. எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது\\” என்றார்.
முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பிரதீப் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, செந்தில்குமார், எஸ்.எஸ் குளம் பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன், துணை தாசில்தார்கள் ரேவதி, ஆகாஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணப்பன் உள்பட 13 துறைகளின் அலுவலர்கள், பேரூராட்சி ஊழியர்கள், இ- சேவை மைய அலுவலர்கள் பங்கேற்றனர்.
The post மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 500 பேர் மனு appeared first on Dinakaran.