×

நெல் அறுவடை செய்யும் டிராக்டரில் சிக்கி சிறுமி பலி

மதுக்கரை. டிச,19: க.க. சாவடி அருகேயுள்ள நவக்கரை பகுதியை சேர்ந்தவர் பூபதி. விவசாயியான இவர் நேற்று காலை தனது தோட்டத்தில் உழவு செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரது 3 வயது மகள் ஹரிணி அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமி ஹரிணி திடீரென பின்பக்கம் சாய்ந்து கிழே விழுந்தார்.

உடனே, பூபதி டிராக்டரை நிறுத்தி விட்டு கிழே இறங்கி ஓடினார். அதற்குள், டிராக்டருக்கு பின்னால் இருக்கும் நெல் அறுவடை செய்யும் மிசினில் சிக்கி தலை, வயிறு, கால் பகுதியில் அறுபட்டு சம்பவ இடத்திலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தன் கண் முன்னே மகள் அறுபட்டு இறந்ததை பார்த்து பூபதி கதறி அழுதார். இது குறித்து க.க. சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெல் அறுவடை செய்யும் டிராக்டரில் சிக்கி சிறுமி பலி appeared first on Dinakaran.

Tags : K. K. Bhopathi ,Navakarai ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...