×

வருமானத்தை வெளியிட வேண்டாம்: மாற்றுத்திறனாளிகளிடம் மோடி நகைச்சுவை


வாரணாசி: வாரணாசியில் பிரதமர் மோடி, மாற்றுத்திறனாளிகளிடம் உரையாடிய நகைச்சுவை உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தனது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசிக்கு வந்துள்ளார். சுமார் ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பிலான 37 திட்டங்களை தொடங்கி வைக்கிறார். சுற்றுப் பயணத்தின் முதல் நாளான நேற்று, காசி தமிழ் சங்கமம் இரண்டாவது சீசனை தொடங்கி வைத்தார். இதுதவிர வாரணாசியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதன்பிறகு, நடேசர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி, அங்கிருந்த மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். மாற்றுத்திறனாளி ஒருவரிடம் அவரது கல்வி, வருமானம், எதிர்கால திட்டங்கள் குறித்து கேள்விகளைக் கேட்டார். பிரதமர் மோடிக்கும், அந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கும் இடையே நடந்த உரையாடல் வருமாறு:

பிரதமர் மோடி: நீங்கள் எவ்வளவு படித்தீர்கள்?
இளைஞர்: எம்.காம் படித்துள்ளேன். தற்போது சிவில் சர்வீசஸ் படிப்புக்கு தயாராகி வருகிறேன்.
பிரதமர்: இங்கு நீங்கள் என்ன திட்டத்தில் பயன் பெற்றீர்?

இளைஞர்: எனக்கு ஓய்வூதியம் கிடைத்தது.
பிரதமர்: நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?
மற்றொரு இளைஞர்: ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறேன்.
பிரதமர்: ஒரு மாதத்தில் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள்?

இளைஞர்: (வருமானம் குறித்து பதில் சொல்லாமல் தயங்கினார்)
பிரதமர்: வருமான வரித்துறையினர் யாரும் வரமாட்டார்கள். வருமான வரித்துறையினரை மோடி அனுப்புவார் என்று நினைக்கிறீர்களா?. (அப்போது அங்கிருந்தவர்கள் சிரித்தனர்). மோடியின் மேற்கண்ட உரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post வருமானத்தை வெளியிட வேண்டாம்: மாற்றுத்திறனாளிகளிடம் மோடி நகைச்சுவை appeared first on Dinakaran.

Tags : Modi ,Varanasi ,Dinakaran ,
× RELATED வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து...