×

ெஜயங்கொண்டத்தில் மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி

ஜெயங்கொண்டம்,டிச.16: ஜெயங்கொண்டத்தில் மின் சிக்கனம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் மின்சாரம் சிக்கன விழிப்புணர்வு வாரமாக டிசம்பர் 14 முதல் டிசம்பர் 20 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனையடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தேசிய மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்பணர்வு பேரணி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளியில் தொடங்கிய பேரணியை ஜெயங்கொண்டம் மின்வாரிய கோட்ட உதவி செயற் பொறியாளர் சிலம்பரசன் தொடங்கி வைத்தார்.

பேரணியில் மின்சாரம் சிக்கனம் தேவை இக்கணம் மின்சாரத்திற்கு பதிலாக சூரியமின் ஆற்றலை பயன்படுத்துவோம் குறைவான மின்சார பயன்பாடு உள்ள மின் சாதனங்களை பயன்படுத்துவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும் முழக்கங்களிட்டு பேரணியாகச் சென்றனர். இதில் பொதுமக்களுக்கு மின் சிக்கனத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஊழியர்கள் வழங்கினர். பெரியார் பள்ளியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மின்வாரிய அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. இப்பேரணியில் உதவி மின் பொறியாளர்கள் கவிதா, சந்திரசேகரன், உடையார்பாளையம் சுரேஷ், ரம்யா மற்றும் அலுவலர்கள் தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ெஜயங்கொண்டத்தில் மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Energy saving awareness rally ,Jejayangonda ,Jayangondam ,Jejayangkond ,Dinakaran ,
× RELATED பள்ளியில் நடந்த சுற்றுச்சூழல்...