×

கவர்னரை தாக்குவதா? தமிழிசை ஆவேசம்

கோவை: கோவை விமான நிலையத்தில் தெலங்கானா கவர்னரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி: ரங்கம் கோயிலில் நடந்த சம்பவம் மிகுந்த மன வருந்தம் அளிக்கிறது. வைகுண்ட ஏகாதசி ஆரம்பிக்கும் நிலையில் ரங்கம் கோயில் மூட வேண்டிய நிலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வேறு மாநிலத்தவர்கள் நம் மாநிலத்தின் கோயில்களுக்கு வரும் போது அதிக பாதுகாப்பு கொடுக்க வேண்டும். கோயில்களின் நிர்வாகம், பாதுகாப்பு நடவடிக்கை, அடிப்படை கட்டமைப்பு ஆகியவற்றை சரி செய்ய வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. காஷ்மீர் முழுவதுமாக நம்மோடு இணைந்திருக்கிறது என்பதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆதாரமாக உள்ளது. பெண்களுக்கு உரிமை கொடுக்கும் கட்சி தான் மத்தியில் ஆட்சியில் உள்ளது. கேரளா உட்பட அனைத்து பகுதிகளிலும் கவர்னர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பது கண்டிக்கத்தக்கது. மற்ற பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகள் கேரள கவர்னர் தாக்குதலுக்கு எதுவும் பேசவில்லை. கருத்தை கருத்தாக எதிர்கொள்ளாமல் கவர்னரை தாக்குவதை கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post கவர்னரை தாக்குவதா? தமிழிசை ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : KOWAI ,Telangana ,Governor ,Puducherry ,State ,Vice Governor ,Tamilusya Sawandarajan ,Goa Airport ,
× RELATED கோவையில் யானை மந்தைகளுடன் குட்டியானையை சேர்க்க முயற்சி!!