×

மனைவியிடம் விவாகரத்து கோரிய ஜம்மு – காஷ்மீர் மாஜி முதல்வர் உமர் அப்துல்லாவின் மனு தள்ளுபடி; டெல்லி ஐகோர்ட் அதிரடி

புதுடெல்லி: மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரிய ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும், அவரது மனைவி பாயல் அப்துல்லாவும் பல வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது திருமணம் 1994ல் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து கோரி, டெல்லி குடும்ப நல நீதிமன்றத்தில் உமர் அப்துல்லா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச்தேவா மற்றும் நீதிபதி விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அவர்கள் பிறப்பித்த உத்தரவில், ‘மனுவில் கூறப்பட்டுள்ளபடி மன மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகளை உமர் அப்துல்லாவால் நிரூபிக்க முடியவில்லை. மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரிய மனுவில், உமர் அப்துல்லா தனது மனைவி மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் தெளிவாக இல்லை என்ற குடும்ப நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்கிறது’ என்று தீர்ப்பளித்தனர்.

The post மனைவியிடம் விவாகரத்து கோரிய ஜம்மு – காஷ்மீர் மாஜி முதல்வர் உமர் அப்துல்லாவின் மனு தள்ளுபடி; டெல்லி ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Former ,Jammu and Kashmir ,Chief Minister ,Omar Abdullah ,Delhi High Court ,New Delhi ,Delhi ,Dinakaran ,
× RELATED 4வது நாளாக முழு அடைப்பு போராட்டம் பாக்....