×
Saravana Stores

வனப்பாதுகாப்பிற்காக வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் முன்னேற்றம்” குறித்தான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் வனத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

சென்னை: வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் தலைமையில் “வனப்பாதுகாப்பிற்காக வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் முன்னேற்றம்” குறித்தான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இன்று (12.12.2023) வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தலைமையில் வனப்பாதுகாப்பிற்காக வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்தான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கிண்டி முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் அவர்கள் முன்னிலையில் துறை ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. வனத்துறையின் உயர் அலுவலர்கள் வனத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முன்னேற்ற அறிக்கையினை அமைச்சர் அவர்களுக்கு விளக்கிக் கூறினார்கள்.

இவ்வாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்த மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள், வன உயிரினங்களால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு விரைந்து இழப்பீடு வழங்கும்படி அறிவுரைகள் வழங்கினார். மனித-விலங்கு உயிரின மோதல்களைத் தடுக்கத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார்.

மேலும், நிலுவையில் உள்ள “முதல்வரின் முகவரி” சார்ந்த மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் தனிக்கவனம் செலுத்தி விரைந்து முடிக்குமாறும் வனத்துறையின் வளர்ச்சித்திட்டங்கள் அனைத்தும் தொய்வின்றி செயல்பட அனைத்து நிலை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை வனத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

இவ்வாய்வு கூட்டத்தில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத்தலைவர்) . சுப்ரத் முஹபத்ர, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வன உயிரினகாப்பாளர் . ஸ்ரீனிவாஸ் ரா. ரெட்டி , முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (நிர்வாகம்) . தெபாசிஸ் ஜானா , முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (புலிகள் திட்டம்) . ராகேஷ்குமார் டோக்ரா , முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனப்பாதுகாப்புச்சட்டம்) யோகேஷ் சிங் , கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வன உயிரினம்) . நாகநாதன் , இணை இயக்குநர் (விளம்பரம்) த. தமிழ்மொழி அமுது மற்றும் அனைத்து மண்டல வனப்பாதுகாவலர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

The post வனப்பாதுகாப்பிற்காக வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் முன்னேற்றம்” குறித்தான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் வனத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. appeared first on Dinakaran.

Tags : Minister of Forestry ,Forest Department for Forest Protection ,Chennai ,Minister ,Mathivandan ,Forest Department for forest conservation ,Department ,Dinakaran ,
× RELATED வனத்துறை அமைச்சர் பொன்முடி எழுதிய...