திருப்பூர்: திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த நாய்குட்டியை லாவகமாக பிடித்து மேற்பகுதிக்கு பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
திருப்பூர் நொய்யல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அணைப்பாளையம் தரைப்பாலம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது, வெள்ளப்பெருக்கு காரணமாக மங்கலம் சாலை – கல்லூரி சாலையை இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் முழுவதும் வெள்ள நீரில் மூடப்பட்டது.
முழங்காலுக்கு மேல் தண்ணீர் செல்வதால் இருபுறமும் காவல்துறையினர் பேரிகாடுகளை வைத்து பொது மக்களை அனுமதிக்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் நொய்யல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது,ஆற்றின் நடுவே உணவு தேடி நின்று கொண்டிருந்த நாய்குட்டி ஒன்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்,விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நொய்யல் ஆற்றில் இறங்கி ஆகாய தாமரை சூழ்ந்து காணப்பட்ட இடத்தை கடந்து வலை மூலம் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த நாய்குட்டியை லாவகமாக பிடித்து மேற்பகுதிக்கு பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்,
அதனைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர் மேலும் நொய்யல் ஆற்று வெள்ளப்பெருக்கில் சிக்கி நீண்ட நேரமாக சாப்பிடாமல் இருந்த நாய்க்குட்டிக்கு பாசமுடன் பிஸ்கட், பிரட் உள்ளிட்டவைகளை வழங்கினர்.
The post திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த நாய்குட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.