×

நத்தத்தில் குடிமை பொருள் தொடர்பான குறைதீர் முகாம்

 

நத்தம், டிச. 10: தமிழகம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் ஒவ்வொரு மாதமும் வரும் 2 வது சனிக்கிழமை அன்று குடிமை பொருள் தொடர்பான குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி இந்த முகாம் நேற்று தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் மேனகா தலைமையில் நடந்தது. இம்முகாமில் நகல் குடும்ப அட்டை 9, முகவரி மாற்றம் 5, பெயர் நீக்கம் கோரி 3, பெயர் சே ர்த்தல் 9, செல் போன் நம்பர் மாற்றம் 3, குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் உள்ளிட்ட மனுக்கள் 12 என மொத்தம் 41 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்கள் அனைத்தும் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு சரி செய்து கொடுக்கப்பட்டது. இதற்கான நகல் அட்டை அச்சடித்து வந்த பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர் டில்லி பாபு உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post நத்தத்தில் குடிமை பொருள் தொடர்பான குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Nadda ,Natham ,Tamil Nadu ,
× RELATED திண்டுக்கல் அருகே பஸ்- வேன் மோதி 8 பேர் படுகாயம்