கோவை, டிச. 9: கோவை மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை நாளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று (9-ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுவிநியோக திட்ட குறைதீர் சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலங்களில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடக்கிறது. இந்த முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம், அலைபேசி எண் மாற்றம் மற்றும் நகல் குடும்ப அட்டைகள் பெறுதல் தொடர்பான குறைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.
The post ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.
