×

பள்ளிகளை திறக்கும் முன் செய்ய வேண்டியது என்ன?.. வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை: பள்ளி கல்வி இயக்குநர் அறிவொளி நேற்று வெளியிட்ட அறிக்கை:
பள்ளிகள் திறக்கப்படும் முன்னதாக பள்ளி வளாகங்களை முழுமையாக தூய்மை செய்ய வேண்டும். முட்புதர்கள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். சுற்றுச்சுவர்கள் ஈரப்பதத்துடன் இருக்கும் என்பதால் மாணவர்களை அருகில் செல்ல அனுமதிக்க கூடாது. மழையால் பாதிக்கப்பட்ட வகுப்புகளை பயன்படுத்தாமல் பூட்டி வைக்க வேண்டும்.

இடிக்க வேண்டிய கட்டிடங்கள் இருந்தால் அவற்றை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும். வகுப்புகளில் உள்ள இருக்கைகளில் பூஞ்சை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கழிப்பறை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். மின் இணைப்புகள் சரியாக இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், பள்ளி மேலாண்மை குழு உதவியுடன் பள்ளிகளுக்கு தேவையான வேறு சில அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

The post பள்ளிகளை திறக்கும் முன் செய்ய வேண்டியது என்ன?.. வழிகாட்டுதல்கள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Education ,the School ,Enlightenment ,Dinakaran ,
× RELATED பயிலும் பள்ளியிலேயே வங்கிக் கணக்கு...