×

10க்கும் மேற்பட்ட விபத்துகள் 334 ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை

சென்னை: மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அனைத்து மண்டல மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிக்காலத்தில் 10க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்படுத்திய 334 ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தினமும் 33 ஓட்டுநர்கள் வீதம் 10 நாளுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படவுள்ளது. இதில் 5 மருத்துவர்கள் அடங்கிய குழு கண், காது, எலும்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு, தொண்டை, பொது மருத்துவ பரிசோதனை மற்றும் மனநல பரிசோதனை செய்யப்படும்.

இதில் தேவைப்பட்டால் மேல் பரிசோதனையும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 334 பணியாளர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அந்தந்த பணிமனைகளில் இருந்து குறிப்பிட்ட தேதியில் தவறாமல் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பவும், அன்றைய தினம் மட்டும் வருகைப் பதிவு வழங்கவும் வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழக தரவுகளின்படி, அண்ணாநகர் பணிமனையில் அதிகபட்சமாக 24 ஓட்டுநர்கள் 10க்கும் மேற்பட்ட விபத்துகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 10க்கும் மேற்பட்ட விபத்துகள் 334 ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Transport Corporation Management ,Rajiv Gandhi Government General Hospital ,Municipal Transport Corporation ,Dinakaran ,
× RELATED ராஜிவ்காந்தி மருத்துவமனையில்...