×

வெள்ள பாதிப்பை பெயரளவுக்கு பார்வையிட்ட அண்ணாமலையை பாதியில் ஓட விட்ட பொதுமக்கள்

ெசன்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதாக கூறி நேற்று முன்தினம் சில பகுதிகளுக்கு சென்றார். அவ்வாறு அவர் வடசென்னை பகுதியில் மக்களை சந்திப்பதற்காக ெதாண்டர்கள் கூட்டத்துடன் சென்றார். அப்போது ஒரு பெண்ணிடம் குறை கேட்பது போல கேட்டார். அந்த பெண், ‘ஐயா 3 மணி நேரமாக காத்துக் கொண்டு இருக்கின்றோம்’ என்றார். அவரைப் பார்த்து முதலில் சாப்பிடுங்கள். சாப்பிடாமல் இருக்கிறீர்கள் என்று அண்ணாமலை சமாதானப்படுத்தினார்.

இங்கே எங்கள் தொண்டர்கள் எல்லாம் இருக்கிறார்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார். ஆனால் அந்தப் பெண்ணோ, ‘சாப்பாடு எல்லாம் இருக்கட்டும். எதிரில் பாருங்கள் 350க்கும் அதிகமான வீடுகள் இருக்கிறது. அருகே உள்ள இடத்தில் 1500க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அங்கே வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பாருங்கள்’ என்று அழைத்தார். ஆனால், அந்த இடத்தை பார்வையிடாமல் அந்த பெண்ணை தட்டிக்கழிப்பது போல அண்ணாமலை பேசினார். மேலும் அங்கிருந்த பாஜவினர் பாரத் மாதா கி ேஜ… என்று கோஷம் மட்டும் எழுப்பினர். அங்கிருந்த ஒரு சில பெண்களுக்கு மட்டும் உணவு ெகாடுக்க முயன்றனர். ஆனால் வீட்டுக்கு வந்து பார்த்தே ஆக வேண்டும் என்று கூறியதால், காரில் ஏறி அங்கிருந்து அண்ணாமலை தப்பி சென்று விட்டார்.

இதற்கிடையே அங்கு கூடியிருந்த இளைஞர்கள், இரவு எல்லாம் கொசுக் கடியிலும், குளிரிலும் கஷ்டப்படுகிறோம். உள்ளே வந்து பார்க்கவில்லை. பஸ் ஸ்டாண்டில் பார்த்து, போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் போடுவதற்காக வருகிறார். இதற்கு நாங்களா கிடைச்சோம். ஒன்றிய அரசு கையில் இருக்கிறது. எவ்வளவு பணிகளை செய்திருக்கலாம். ஆனால் யாரும் வரவில்லை. 2 நாள் கழித்து இப்போது வந்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விட்டுச் செல்கிறார். இதனால் தான் நாங்கள் அவரை அனுமதிக்கவில்லை. கேள்வி கேட்டதால் ஓடி விட்டார் என்றனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவது போல நாடகமாடிய அண்ணாமலையின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

மீட்பு பணி: அதிகாரிகளுக்கு பாராட்டு
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: வடியாத நீரிலும் அரசு அதிகாரிகள் நன்றாகப் பணியாற்றினார்கள். இதுபோல, பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய சி.ஆர்.பி.எப் தீயணைப்புத் துறை வீரர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் மனிதருள் மாணிக்கங்களாக போற்றத்தக்கவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற பொறுப்பாளர்கள், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களின் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடந்தது. இதில், நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு சந்திப்பது, தொகுதிகளில் பாஜவின் செல்வாக்கு எப்படி உள்ளது. எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

The post வெள்ள பாதிப்பை பெயரளவுக்கு பார்வையிட்ட அண்ணாமலையை பாதியில் ஓட விட்ட பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Jesannai ,Tamil ,Nadu ,BJP ,President ,Chennai ,
× RELATED தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே...