×

காதல் தோல்வியால் விரக்தியடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

 

புதுச்சேரி, டிச. 8: புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியம், டரியாலத்திப்பா, பாலயோகி காலனியைச் சேர்ந்தவர் ரகடி ராஜூ (47). மீனவரான இவர் தனது மனைவி, மகன்கள், மகள்களுடன் வசித்து வருகிறார். இவரது மகள் ரகடி லட்சுமி பிரசன்னா (21). இவர் காக்கிநாடாவில் உள்ள ஒரு கடையில் வேலை செய்தபோது, உடன் பணிபுரிந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. நாளடைவில் அது காதலாக மாறிய நிலையில், தான் விரும்பிய காதலனை மணமுடிக்க பெற்றோரிடம் லட்சுமி பிரசன்னா சம்மதம் கோரியதாக தெரிகிறது.

முதலில் அதற்கு ஒப்புதல் தெரிவித்த பெற்றோர், கடந்த மாதம் லட்சுமி பிரசன்னாவின் காதலனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்ட தகவல் வரவே, இதுபற்றி தனது மகளிடம் எடுத்துக்கூறி காதலுக்கு முட்டுக்கட்டை போட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பெற்றோர் வெளியே உறவினர் வீட்டு விசேஷ நிகழ்வில் பங்கேற்க சென்றபோது தனது அறையில் லட்சுமி பிரசன்னா மின்விசிறியில் தூக்கில் தொங்கியுள்ளார்.

சிறிதுநேரத்திற்குபின் அங்குவந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது லட்சுமி பிரசன்னா, தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதனர். பின்னர் அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே லட்சுமி பிரசன்னா இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இதுதொடர்பாக ஏனாம் காவல்துறை வழக்குபதிந்து விசாரித்து வருகிறது.

The post காதல் தோல்வியால் விரக்தியடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Ragadi Raju ,Balayogi Colony ,Darialathippa ,Puducherry State ,Enam Region.… ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை