×

அபராத தொகை இல்லாமல் மின் கட்டணம் செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கால அவகாசத்தை டிச.18ம் தேதிவரை நீட்டித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை:
கடந்த டிச.3ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவெடுத்து டிச.4ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 3 தினங்களாக மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மின் உபயோகிப்பாளர்களின், மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் டிச.4ம் தேதி முதல் 7ம் தேதி வரை இருந்த நிலையில், அபராதத் தொகை இல்லாமல் வரும் டிச.18ம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. மேலும் டிச.4ம் தேதி முதல் 6ம் தேதிவரை மின்கட்டணத்துடன் அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post அபராத தொகை இல்லாமல் மின் கட்டணம் செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister Thangam Thanaras ,CHENNAI ,Minister Thangam ,Southern Government ,Minister ,Thangam ,Dinakaran ,
× RELATED குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான...