×

மேல்மருவத்தூர்-விழுப்புரம் விரைவு ரயில் பகுதியளவில் ரத்து

 

விழுப்புரம், டிச. 3: மேல்மருவத்தூர்-விழுப்புரம் விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் டிசம்பர் மாதத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் மேல்மருவத்தூரில் இருந்து முற்பகல் 11.45 மணிக்கு புறப்படும் மேல்மருவத்தூர்-விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 06725), முண்டியம்பாக்கம்-விழுப்புரம் இடையே டிசம்பர் 4,9,11,16,18,23,30 ஆகிய தேதிகளில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும். எதிர்வழி தடத்தில் விழுப்புரத்தில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு மேல்மருவத்தூருக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-மேல்மருவத்தூர் முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 06726), டிசம்பர் 4,9,11,16,18,23,30 ஆகிய தேதிகளில் விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் குறிப்பிடப்பட்ட நாட்களில் முண்டியம்பாக்கத்தில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு மேல்மருவத்தூருக்கு புறப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மேல்மருவத்தூர்-விழுப்புரம் விரைவு ரயில் பகுதியளவில் ரத்து appeared first on Dinakaran.

Tags : Melmaruvathur ,Villupuram ,Melmaruvathur-Villupuram Express ,Southern Railway ,Villupuram express ,Dinakaran ,
× RELATED மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்...