×

சிவகாசி நகர் பகுதிகளில் குவிந்து கிடக்கும் கட்டிட கழிவுகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 

சிவகாசி, டிச. 3: சிவகாசியில் பிரதான சாலைகளில் குவிந்து கிடக்கும் கட்டிட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். சிவகாசி நகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதனால் சேதமடைந்துள்ள சாலைகளை பெயர்த்தெடுத்து புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டது.

நகரில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் செல்லும் பிரதான சாலையான சேர்மன் சண்முக நாடார் சாலையோரத்தில் குவியல் குவியலாக பெயர்த்து எடுக்கப்பட்ட சாலை கழிவுகளும் பல்வேறு இடங்களில் கட்டிடங்களை புதுப்பிப்பதற்காக அகற்றப்படும் பழைய கட்டிட கழிவுகளும் குவித்து வைக்கப்பட்டுள்ளன. சாலையின் நடுப்பகுதி வரை இந்த கழிவுகள் சரிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.

குவித்து வைக்கப்பட்டுள்ள இந்த கட்டிட கழிவுகள் முன்பு ஏராளமான டூவீலர்கள் மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. சாலையில் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலைகளில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகளை முறையாக அகற்றி வேறு பகுதிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும். மாநகராட்சி பகுதியிலும், முக்கிய பிரதான சாலையோரத்தில் கட்டிடக்கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சிவகாசி நகர் பகுதிகளில் குவிந்து கிடக்கும் கட்டிட கழிவுகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sivakasi Nagar ,Sivakasi ,Dinakaran ,
× RELATED மாநில தடகள போட்டியில் சிவகாசி ஆர்எஸ்ஆர் பள்ளி மாணவர்கள் சாதனை